குடி குடியை கெடுக்கும் என்று தெரியும் ஆனாலும் குடிப்பான் குடிகாரன்.
போதைப்பொருள்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துபவனை தின்று கொண்டுதான் இருக்கிறது.
நாம் அறிந்ததை விடவும் பாதிப்பின் அளவை அதிகமாக அறிந்து வைத்திருப்பான் குடிகாரன்.
குடிப்பவன் அத்தனை பேரும் அடிமைதான்- போதைக்கு.
"Weekly Once தா குடிப்பேன், Party க்கு போனா மட்டும் தான் குடிப்பேன்" என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை , தன்னை ஆட்கொண்டுவிட்டது என்றால் அது நம்மை அடிமையாக்கிவிட்டது என்றுதான் பொருள்.
ஒவ்வொரு 10 வினாடிகளுக்கும் ஒருவரை குடி கொலை செய்கிறது. --WHO- World Health Organization
2014 May 12ல் உலகம் முழுதும் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
2014 May 12ல் உலகம் முழுதும் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த 10 நொடிகளில் ஒருவராக குடி பழக்கம் உள்ள நாமே,நம் உறவினரோ, நண்பரோ- அந்த பாக்கியவான் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
புகைபிடிப்பது ,மது அருந்துவது, எல்லாம் ஒரு Style , Fashion என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்த விதையை விதைத்த நம் திரைத்துறைக்கு மனமாரந்த நன்றிகள்.,
எமன் இவர்களுக்கு வரிகட்டுவார் போல.!!!
எமன் இவர்களுக்கு வரிகட்டுவார் போல.!!!
குடியை பற்றி பாட்டு வைப்பது, நண்பர்கள் சேர்ந்தாலே குடிப்பார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியது , பார்டி என்றால் குடி ..
இப்படி எங்கோ நடந்ததை எல்லாம் இளைய தலைமுறையிடம் அழகாக உள்ளிரக்கிவிட்டார்கள்.
இப்படி எங்கோ நடந்ததை எல்லாம் இளைய தலைமுறையிடம் அழகாக உள்ளிரக்கிவிட்டார்கள்.
வேறு யாருக்கு இதில் பங்குண்டு
போதைப் பழக்கம் கற்றுக்கொடுப்பது, கற்றுக்கொள்வது எல்லாம் நண்பனிடம் இருந்துதான்.
போதைப் பழக்கம் கற்றுக்கொடுப்பது, கற்றுக்கொள்வது எல்லாம் நண்பனிடம் இருந்துதான்.
ஊத்திகொடுக்கும் நட்பு; உயிரை கொடுக்கும் நட்பு அல்ல, அறிவின்மையால் உன்னை கெடுத்து உன் உயிரை எடுக்கும் நட்பு அது.
வீதிக்கு வீதி டாஸ்மாக்கை துறந்து வைத்திருக்கிறோம் இதை விட வேறு என்ன நல்லகாரியம் செய்துவிட முடியும் நம் அரசாங்கம்.
அரசாங்கம் ஒருபோதும் இதை மூடப்போவது இல்லை.,
பெருவாரியான மக்கள் கூட்டம் ஒன்று திரண்டு டாஸ்மாக்கை திறந்தால் அடித்து உடைப்பேன், தீயிட்டு கொளுத்துவேன் என்று பொங்கி எழுந்து அடித்து துவம்சம் செய்தால் தான் இந்த சாராய கலாச்சாரம் ஒழியும்.
ஆகா... நடைமுறையை மீறி சினிமா கலாச்சாரத்திற்கு சென்று விட்டேனோ?? மக்கள் எழுச்சி,போராட்டம் என்று பிதற்ற ஆரம்பித்து விட்டேன்..
சாராய கலாச்சாரத்திற்கு தீர்வு மக்கள் எழுச்சியும், சாராயக்கடைகள் தீக்கிரை ஆக்கப்படுவதும் தானே தவிற வேறெந்த நல்ல முறை போராட்டமும் இப்போதைக்கு தீர்வாகப்போவதில்லை.
வேண்டுமென்றால் அகிம்சை வழியில் போராடி இன்னும் ஆயிரம் ஆயிரம் பெண்கள் விதவை கோலம் பூண்டு, பல குடும்பம் நடுத்தெருவை அடைந்தபிறகு உங்கள் அகிம்சையில் வெற்றி கண்டு..
அந்த வெற்றியை விதவைகளின் காலடியில் சமர்ப்பித்தால் மகாத்மா மகிழ்ச்சி அடைவார் போலும்???????

No comments:
Post a Comment